பெகாசஸ் உளவு மென்பொருளை பயன்படுத்த சில நாடுகளுக்கு தடை? – தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 1 ஆகஸ்ட் 2021 (09:32 IST)
உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பெகாசஸ் மென்பொருளை பயன்படுத்த சில நாடுகளுக்கு தயாரிப்பு நிறுவனமே தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இஸ்ரேலின் ஐ.என்.எஸ் நிறுவனம் தயாரித்த பெகாசஸ் மென்பொருள் உலக அளவில் பல நாடுகளில் முக்கிய தலைவர்களை ஒட்டுக்கேட்க பயன்படுத்தப்பட்டதாக வெளியான விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் அரசியல் வாதிகள், பத்திரிக்கையாளர்கள் உளவு பார்க்கப்பட்டதாக எதிர்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றம் முடங்கியுள்ளது.

இந்நிலையில் தங்களது பெகாசஸ் மென்பொருளை குறிப்பிட்ட சில நாடுகள் பயன்படுத்த தடை விதித்து அந்நிறுவனமே அறிவித்துள்ளதாக வாசிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. தடை செய்யப்பட்ட நாடுகளில் சவுதி அரேபியா, மெக்சிகோ, துபாய் ஆகிய நாடுகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்