ஆன்லைன் கட்டண நிறுவனமான PayPal பணி நீக்கத்தை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு நேரத்தில் ஏராளமான நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கை எடுத்தது என்பதும் இதில் மைக்ரோசாப்ட், கூகுள், பேஸ்புக் உள்பட பல நிறுவனங்கள் இருந்தன என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் வருமானத்தை அதிகரிக்கவும் நஷ்டத்தை குறைக்கவும் ஒரு சில நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன. அந்த வகையில் உலகின் முன்னணி ஆன்லைன் கட்டண நுழைவாயில் நிறுவனங்களில் ஒன்றான PayPal நிறுவனம் பணி நீக்க நடவடிக்கையை தொடங்கியுள்ளது.
இதன்படி 2500 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிறுவனத்தின் வருவாயை அதிகரிக்கவும் நஷ்டத்தை தவிர்க்கவும் இந்த பணிநீக்கம் இன்றியமையாதது என PayPal நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்நிறுவனத்தின் சிஇஓ அலெக்ஸ் என்பவர் ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் பணிநீக்கம் செய்யப்படுவோருக்கு இந்த வார இறுதிக்குள் தகவல் தெரிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
PayPal நிறுவனத்தை அடுத்து இன்னும் சில நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.