விளக்கம் கொடுத்தும் விருப்பம் காட்டாத மக்கள்! – சிக்கலில் வாட்ஸப்; கொண்டாட்டத்தில் டெலிகிராம்!

Webdunia
ஞாயிறு, 7 பிப்ரவரி 2021 (14:57 IST)
வாட்ஸ் அப்பின் புதிய தனிநபர் கொள்கைகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அதற்கு வாட்ஸ் அப் நிறுவனம் விளக்கம் அளித்தும் மக்கள் வாட்ஸ் அப்பை தொடர்ந்து புறக்கணித்து வருவது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் 5 பில்லியனுக்கும் அதிகமான மக்களால் தகவல் பரிமாற்றத்திற்கு அதிகமாக உபயோகிக்கப்படும் செயலியாக வாட்ஸ் அப் இருந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் வாட்ஸ் அப் வெளியிட்ட தனிபர் கொள்கைகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. அதை தொடர்ந்து மக்கள் வாட்ஸ் அப்புக்கு பதிலாக சிக்னல், டெலிகிராம் உள்ளிட்ட செயலிகளுக்கு மாற தொடங்கினர்.

இதனால் வாட்ஸ் அப் பாதிப்படைந்த நிலையில் தங்களது தனிநபர் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என விளக்கமும் அளித்தது. ஆனாலும் வாட்ஸ் அப் உபயோகிப்பவர்கள் எண்ணிக்கை மெல்ல குறைய தொடங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 5 கோடி பேர் டெலிகிராம் செயலியை டௌன்லோட் செய்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்