இந்தியாவில் பிரபலமாக இருந்த சீன கேம் செயலியான பப்ஜி சமீபத்தில் தடை செய்யப்பட்டது. இந்நிலையில் பப்ஜிக்கு நிகராக இந்தியாவில் ஃபைஜி எனப்படும் புதிய கேம் உருவாக்கப்பட்டு வந்தது. இந்திய எல்லையில் ராணுவத்தில் நடைபெறுவது போல அமைக்கப்பட்டுள்ள கேம் கூகிள் ப்ளே ஸ்டோர் உள்ளிட்டவற்றில் நேற்று வெளியானது.