அலெக்ஸாஎக்கோஎனும் உபகரணம்மூலம்பொருட்களை ஆர்டர் செய்து அசத்தி வருகிறது ஒரு அற்புதக் கிளி.
அமெரிக்காவின் பெர்க்ஷயரில் உள்ள தேசிய விலங்கு நல அறக்கட்டளை சரணாலயத்தில் உள்ள ரொக்கோ எனும் வகைக் கிளி வளர்க்கப்பட்டு வந்தது. பேசும் திறன் கொண்ட அந்தக் கிளி அந்த பூங்காவில் வருவோர் போவோர் எல்லோரையும் கெட்ட வார்ததைகள் பேசி திட்ட ஆரம்பித்திருக்கிறது. இதனால் அந்த கிளியை அந்த பூங்காவில் இருந்து வேறு இடத்துக்கு மாற்றவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் அந்தக் கிளியை பூங்காவில் வேலை செய்த விஷ்நெவ்ஸ்கி என்பவர் எடுத்துக் கொண்டார்.
அதையடுத்து அவரது வீட்டில் வளர்ந்து வந்த கிளி, சில நாட்கலிலேயே அவரது குரலைப் போலவே பேச ஆரம்பித்துள்ளது. அதனைப் பார்த்து மகிழ்ந்திருக்கிறார், விஷ்நெவ்ஸ்கி. ஆனால் அவருக்கு அந்த மகிழ்ச்சி நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை.
அமேசான் அலெக்ஸாவுடன் நட்பு பூண்டு தனக்கு என்னென்ன பிடிக்குமோ அத்தனையையும் தனது உரிமையாளரின் குரலில் பேசி ஆர்டர் செய்துள்ளது. இதனை கண்டுபிடித்த விஷ்நெவ்ஸ்கி அதிர்ந்து போயிருக்கிறார். ஆன்லைன் ஷாப்பிங்குடன் அலெக்ஸாவுக்கே இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்து கிங்ஸ் ஆஃப் லியான் இசைக்குழுவின் இசைகளை இசையையும் கேட்டு ரசிக்கிறதாம் இந்த ரொக்கோ கிளி.