சீனர்களுக்கு கழுதைகளை பரிசளிக்கும் பாகிஸ்தான்: எதற்கு இந்த விபரீத பரிசு??

Webdunia
திங்கள், 10 ஏப்ரல் 2017 (11:17 IST)
சீன முதலீட்டாளர்களுக்கு பாகிஸ்தான் அரசு கழுதைகளை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக ரூ.100 கோடி முதலீட்டில் கழுதை வளர்ச்சித் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.


 
 
சீனாவின் கழுதைகள் தேவையைக் கணக்கில்கொண்டு பாகிஸ்தான் பெரிய அளவில் கழுதை வளர்ப்புப் பண்ணைகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது. 
 
கழுதைகளின் தோல் மருந்து உற்பத்திகளில் பயன்படுவதால், சீனாவில் கழுதைகளுக்கான தேவை அதிகம். 
 
எனவே, இந்த மாதம் சீனாவில் இரண்டு நாட்கள் சாலை நிகழ்ச்சியின் போது முதலீட்டாளர்களுக்கு இந்தக் கழுதை ஏற்றுமதி திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என தெரிகிறது.
அடுத்த கட்டுரையில்