பிரதமர் மோடி உருவபொம்மையை காலில் மிதிக்கும் பாகிஸ்தானியர்கள்! அதிர்ச்சி வீடியோ

Webdunia
திங்கள், 28 அக்டோபர் 2019 (08:14 IST)
பிரதமர் நரேந்திர மோடியின் பல்வேறு நடவடிக்கைகள் பாகிஸ்தானிய மக்களை கோபம் அடைய செய்துள்ளது என்பது தெரிந்ததே. குறிப்பாக காஷ்மீரின் 370வது சிறப்பு பிரிவை நீக்கிய நடவடிக்கைக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உட்பட பாகிஸ்தானில் உள்ள அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர் 
 
பிரதமர் மோடி பல்வேறு கண்டனங்களை பாகிஸ்தானியர்கள் தெரிவித்து வரும் நிலையில் தற்போது நேற்றைய தீபாவளி அன்று லண்டனில் உள்ள பாகிஸ்தானியர்கள் பிரதமர் மோடியின் உருவ பொம்மையை அவமதித்தனர்
 
பிரதமர் மோடியின் உருவ பொம்மை பொம்மையை தரையில் போட்டு அதை சுற்றிலும் பாகிஸ்தானியர்கள் காலால் மிதித்தும் கையால் உதைத்தும் அவமதித்தனர். இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஒரு நாட்டின் பிரதமரை இவ்வாறு அவமானப்படுத்துவது மிகப்பெரிய குற்றம் என்றும் இந்த நபர்களை உடனடியாக கண்டுபிடித்து லண்டன் போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்தியர்கள் மட்டுமின்றி உலகெங்கும் உள்ள மக்கள் லண்டன் போலீசார் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்து விரைவில் லண்டன் போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்