இந்தியாவுடன் போட்டி போடாமல் சண்டையிட்டு கொண்டிருக்கிறோம்: பாகிஸ்தான் செய்தி சேனல்..!

Webdunia
ஞாயிறு, 27 ஆகஸ்ட் 2023 (14:22 IST)
இந்தியா நிலவில் கால் வைத்து விட்டது. இது போன்ற விஷயங்களில் இந்தியாவுடன் நான் போட்டி போட வேண்டும், ஆனால் மாறாக நாம் இந்தியாவுடன் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறோம் என்று பாகிஸ்தான் செய்தி சேனல் ஒன்று தெரிவித்துள்ளது. 
 
நிலவின் தேன் துருவத்தில் கால் வைத்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ள நிலையில் உலகமே இந்திய விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றன
 
இந்த நிலையில் பாகிஸ்தான் செய்தி சேனல் ஒன்று இந்தியாவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது. நாம் எப்போதும் அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் சாதிப்பதை தான் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இந்தியா சாதித்தது சந்தோஷம் அளிக்கிறது.  
 
நாம் இந்தியாவுடன் இது போன்ற விஷயங்களில் தான் போட்டி போட வேண்டும் மாறாக நமக்குள்ளே நாம் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளது. இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்