காங்கிரஸ் கட்சி இந்தியாவுக்கு செய்தது என்ன? அமித்ஷா கேள்விக்கு கார்கே பதில்!

ஞாயிறு, 27 ஆகஸ்ட் 2023 (12:35 IST)
காங்கிரஸ் கட்சி நாட்டிற்கு செய்தது என்ன என மத்திய அமைச்சர் அமித்ஷா விமர்சித்திருந்த நிலையில் அதற்கு பதிலளித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியுள்ளார்.



அடுத்த ஆண்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக இறங்கியுள்ளன. கடந்த இரண்டு முறை வென்ற பாஜகவே இந்த முறையும் வெல்ல வாய்ப்பிருப்பதாக பல கருத்து கணிப்புகளும் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் பல மேடைகளிலும் பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட பாஜக பிரபலங்கள் காங்கிரஸ் ஆட்சியை விமர்சித்து வருகின்றனர்.

அவ்வாறாக ஒரு கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த 54 ஆண்டுகளில் காங்கிரஸ் இந்தியாவிற்கு செய்தது என்ன என விமர்சித்து பேசியிருந்தார். அதற்கு தெலுங்கானாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பதில் அளித்து பேசியுள்ளார். அதில் அவர் “காங்கிரஸ் 54 ஆண்டுகளில் செய்தது என்ன என அமித்ஷா பல மேடைகளில் தொடர்ந்து கேட்டு வருகிறார். 562 சமஸ்தானங்களை சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவுடன் ஒருங்கிணைத்தது காங்கிரஸ் கட்சி. சர்தார் வலபாய் படே இந்தியாவை ஒற்றுமைப்படுத்தினார். அம்பேத்கர் மற்றும் காங்கிரஸ் கட்சிதான் நாட்டிற்கு அரசியலமைப்பு சட்டத்தை வழங்கியது. IIT, IIM, AIMS, ISRO, DRDO, BEL, ONGC என அனைத்து அரசு நிறுவனங்களும் இந்தியாவிற்கு நேரு மற்றும் காங்கிரஸ் கட்சி வழங்கிய பரிசுகள்” என பேசியுள்ளார்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்