உலகக் கோப்பைக்கான ஆடுகளங்கள் எப்படி இருக்க வேண்டும்… ஐசிசியின் முக்கிய முடிவு!

ஞாயிறு, 27 ஆகஸ்ட் 2023 (11:55 IST)
50 ஓவர் உலகக் கோப்பை தொடர் இந்த முறை அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்க உள்ளது.உலகக் கோப்பை தொடர் இன்னும் ஒரு மாத காலத்தில் இந்தியாவில் தொடங்க நிலையில் இந்த முறை இந்தியாவில் உள்ள மைதானங்களில் மட்டுமே நடக்க உள்ளதால் இந்திய அணிக்குக் கூடுதல் வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை செப்டம்பர் 5 ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என ஐசிசி அறிவித்துள்ளது. இந்நிலையில் இப்போது உலகக் கோப்பை தொடர்கள் நடக்கும் 10 மைதானங்களையும் எப்படி அமைக்க வேண்டும் என்பது தொடர்பாக ஐசிசி, ஆடுகள பராமரிப்பு பணியாளர்களோடு ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.

அதன்படி மைதானங்கள் அனைத்தும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 60 சதவீதம் பேட்டிங்குக்கு ஒத்துழைக்கும் விதமாகவும், 40 சதவீதம் பவுலிங்குக்கு ஒத்துழைக்கும் விதமாகவும் அமைக்க வேண்டும் எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்