இந்திய விமானத்தை கடத்திய பயங்கரவாதி! – பாகிஸ்தானில் சுட்டுக்கொலை!

Webdunia
புதன், 9 மார்ச் 2022 (08:25 IST)
கடந்த 1999ம் ஆண்டு இந்திய விமானத்தை கடத்திய பயங்கரவாதிகளில் ஒருவன் பாகிஸ்தானில் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 1999ம் ஆண்டு டிசம்பர் மாதம் நேபாள தலைநகர் காத்மாண்டுவிலிருந்து டெல்லி புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை பாகிஸ்தான் பயங்கரவாத கும்பல் கடத்தியது.

அப்போது தாலிபான்கள் கட்டுப்பாட்டில் இருந்த ஆப்கானிஸ்தானுக்கு விமானத்தை கொண்டு சென்ற கும்பல் இந்திய சிறையில் இருந்த மசூத் அசார் உள்ளிட்ட 3 பயங்கரவாதிகளை விடுவித்தால் பயணிகளை திரும்ப ஒப்படைப்பதாக கூறினர். இந்திய அரசு பயங்கரவாதிகளை ஒப்படைத்து மக்களை மீட்டது.

இந்த விமான கடத்தல் சம்பவத்தில் முக்கிய மூளையாக செயல்பட்ட ஜாகூர் இப்ராஹிம் தற்போது சிந்து மாகாணத்தில் பர்னிச்சர் கடை நடத்தி வந்துள்ளான். சமீபத்தில் அவனது பர்னிச்சர் கடைக்குள் புகுந்த மர்ம கும்பல் சரமாரியாக சுட்டதில் ஜாகூர் சம்பவ இடத்திலேயே பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்