திருச்செந்தூரில் மூலவரை தரிசிக்க அமலில் இருந்த சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் முறை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று திருச்செந்தூர் சுப்பிரமணியன் கோவில். நாள்தோறும் இந்த கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக வருகை தருகின்றனர். தற்போது கொரோனா கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளதால் கூட்டம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் சிறப்பு தரிசனத்திற்காக இதுவரை அளிக்கப்பட்டு வந்த ரூ.250 விலை டிக்கெட் இனி இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோலா ரூ.20 டிக்கெட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரூ.100 தரிசன டிக்கெட் மற்றும் பொது தரிசனம் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ள நிலையில் இருவேறு பக்தர்களும் மகாமண்டபத்தில் இருந்து ஒரே வழியில் சென்று மூலவரை தரிசிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.