தாவுத் இப்ராஹிம் பாகிஸ்தானில் தான் உள்ளார்: முதல் முதலாக ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்

Webdunia
ஞாயிறு, 23 ஆகஸ்ட் 2020 (09:00 IST)
மும்பையில் கடந்த 1993ஆம் ஆண்டு நடைபெற்ற தொடர் வெடிகுண்டு தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தாவூத் இப்ராகிமை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்திய அரசு பாகிஸ்தானுக்கு வலியுறுத்தி வருகிறது 
 
தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் இருப்பதாக பல்வேறு ஆதாரங்களையும் இந்திய அரசு பாகிஸ்தானிடம் அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் இல்லை என பாகிஸ்தான் அரசு தொடர்ந்து மறுத்து வந்தது இதனால் இரு நாடுகளுக்கு இடையே தொடர்ந்து பிரச்சனை ஏற்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்தியாவில் மட்டுமன்றி பல்வேறு நாடுகளின் தேடப்படும் குற்றவாளியாக இருக்கும் தாவுத் இப்ராஹிம் பாகிஸ்தானில் இருப்பது இந்தியா உள்பட மேலும் சில நாடுகள் கண்டித்தன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தாவூத் பாகிஸ்தானில் இல்லை என தொடர்ந்து கூறி கொண்டிருந்த பாகிஸ்தான் தற்போது முதல் முதலாக பாகிஸ்தானில் தான் தாவூத் முடியாமல் இருப்பதாக ஒப்புக்கொண்டுள்ளது 
 
கராச்சி நகரில் உள்ள ஒயிட் ரைஸ் என்று அழைக்கப்படும் ஒரு கட்டிடத்தில் தான் தாவூத் இப்ராஹிம் இருப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்தியாவிடம் தாவூத் இப்ராகிமை ஒப்படைப்பது குறித்து எந்த உறுதிமொழியையும் பாகிஸ்தான் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்