ஒரு இரட்டைச்சதம், ஒரு சதம்: 583 ரன்கள் குவித்த இங்கிலாந்து

ஞாயிறு, 23 ஆகஸ்ட் 2020 (07:50 IST)
ஒரு இரட்டைச்சதம், ஒரு சதம்: 583 ரன்கள் குவித்த இங்கிலாந்து
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட் செய்தது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 583 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்து உள்ளது. கிராலே 267 ரன்களும், பட்லர் 152 ரன்களும் குவித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதனை அடுத்து பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நிலையில் 10.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 24 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்தின் ஆண்டர்சன் மிக அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் 
 
இந்த டெஸ்ட் ஆரம்பத்திலேயே இங்கிலாந்துக்கு சாதகமாக சென்று கொண்டிருப்பதால் அந்த அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த தொடரில் இங்கிலாந்து ஒரு வெற்றியைப் பெற்றுள்ளது என்பதும் ஒரு போட்டி மழை காரணமாக டிராவில் முடிந்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்