நெகட்டிவ் ரிசல்ட் வந்தவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை:
கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் வந்தவர்களை மட்டுமே அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பெற்று வரும் நிலையில் நெகட்டிவ் ரிசல்ட் வந்த ஒருவரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
வேலூரை சேர்ந்த பாபு என்பவர் ஹோட்டல் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததை அடுத்து சிறப்பு முகாமை சேர்ந்த மருத்துவர்கள் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். அதன் பின் அவருக்கு செல்போனில் குறுஞ்செய்தியாக அவருக்கு நெகட்டிவ் என ரிசல்ட் வந்து உள்ளது
இருப்பினும் திடீரென இரண்டு நாட்கள் கழித்து அவரை மருத்துவ ஊழியர்கள் 108 ஆம்புலன்சில் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் தனக்கு கொரோனா இல்லை என்றும், நெகட்டிவ் என தனக்கு மெசேஜ் வந்துள்ளதை மருத்துவரிடம் காண்பித்துள்ளார். ஆனால்மருத்துவர்கள் அவருக்கு எந்த பதிலும் கூறாமல் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்
இதுகுறித்து பாபு அளித்த புகாரின் அடிப்படையில் தற்போது மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. இது குறித்து மருத்துவ துறை இயக்குனர் அவர்கள் கூறியபோது ’பாபு என்பவருக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்த பின்னரும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது குறித்து விசாரணை செய்யப்படும் என்றும் ஒருவேளை குறுஞ்செய்தி தவறாக வந்திருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது