நாடே கஷ்டத்துல போகுது.. டீ குடிப்பதை குறைச்சிக்கோங்க! – அமைச்சர் வேண்டுகோள்!

Webdunia
புதன், 15 ஜூன் 2022 (15:30 IST)
பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில் டீ குடிப்பதை குறைத்துக் கொள்ளுமாறு பாகிஸ்தான் அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையை தொடர்ந்து பாகிஸ்தானிலும் அந்நிய செலவாணி இருப்பு வேகமாக குறைந்து வருகிறது. இதனால் வெளிநாடுகளில் இருந்து அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதில் சிக்கல்கள் நிலவி வருகிறது. மேலும் பாகிஸ்தான் முழுவதும் மின் பற்றாக்குறையும் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டு மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ள அந்நாட்டு அமைச்சர் இக்பால் “நாம் டீத்தூளை கடன் வாங்கிதான் இறக்குமதி செய்யும் நிலையில் உள்ளோம். எனவே நாட்டின் நலன் கருதி மக்கள் ஒன்று, இரண்டு கப் தேநீரை குறைத்து அருந்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

அதுபோல தொழில்நிறுவனங்கள், அங்காடிகள் உள்ளிட்ட கடைகள் இரவு 8.30 மணிக்குள் கடையை மூடி மின்சாரத்தை மிச்சப்படுத்தவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்