விரைவில் ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு வெளியீடு: தமிழக அரசு தகவல்!

புதன், 15 ஜூன் 2022 (09:29 IST)
விரைவில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவிப்பு வெளிவரும் என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
 
நடப்பு ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் நடத்த டிஆர்பி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
அரசு பள்ளிகளில் காலியாக உள்ள சுமார் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப இந்த தகுதி தேர்வு நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த தகுதி தேர்வில் தேர்வு எழுதுவதற்காக 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இரண்டு கட்டங்களாக இந்த தேர்வு நடத்த தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் டிஆர்பி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்