கடன் நெருக்கடி எதிரொலி: அரசு சொத்துக்களை விற்பனை செய்யும் பாகிஸ்தான்!

Webdunia
திங்கள், 25 ஜூலை 2022 (18:18 IST)
பாகிஸ்தான் நாட்டின் கடன் நாளுக்குநாள் அதிகரித்து வருவதையடுத்து அரசின் சொத்துக்களை விற்பனை செய்ய அந்நாட்டு அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
 
பாகிஸ்தானுக்கு சொந்தமான அரசு சொத்துக்கள் எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களை கத்தார், ஐக்கிய அரபு எமிரேட் போன்ற நாடுகளுக்கு விற்பனை செய்ய இருப்பதாகவும் அரசு நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
இதற்காக சிறப்பு சட்டம் இயற்றப்படுவதாகவும் இந்த சட்டத்தை எதிர்த்து யாரும் நீதிமன்றம் செல்ல முடியாத வகையில் இந்த சட்டம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது 
 
இந்த சட்டம் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட உடன் அதிபரின் கையெழுத்துக்காக அனுப்பி வைக்கப்படும் என்றும் அதிபர் கையெழுத்து போட்டவுடன் அரசின் சொத்துக்களை விற்று வெளிநாட்டு கடன்களை அடைக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்