தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளர், வணிகவரித் துறை துணை அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார் பதிவாளர் போன்ற பதவிகள் குரூப் 2-இல் அடங்குகின்றன.
அதேபோல் கூட்டுறவுத் துறையில் முதுநிலை ஆய்வாளர், இந்து அறநிலைய துறையில் தணிக்கை ஆய்வாளர், உள்ளாட்சி நிதி தணிக்கையில் உதவி ஆய்வாளர், அமைச்சுப் பணியாளர்களில் உதவியாளர், இளநிலை கணக்காளர் ஆகியவை குரூப் 2A பிரிவில் உள்ளன.
2023-ம் ஆண்டு செப்டம்பரில் இந்த இரு பிரிவுகளுக்குமான முதன்மைத் தேர்வு நடந்தது. மொத்தமாக 534 இடங்கள் குரூப் 2-இல், 2,006 இடங்கள் குரூப் 2A-இல் காலியாக உள்ளன. இந்தத் தேர்வில் சுமார் 5.8 இலட்சம் பேர் பங்கேற்றனர். அதன் தொடர்ச்சியாக முதன்மைத் தேர்வு, பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெற்றது.
தற்போது, இந்த தேர்வின் முடிவுகள் www.tnpsc.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வாணையம் 13வது முறையாக திட்டமிட்ட காலத்துக்குள் முடிவுகளை வெளியிட்டுள்ளது. மேலும் இம்முறை வெறும் 53 வேலை நாட்களில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.