கார்கில் போருக்கு நாங்கள்தான் காரணம் .. உண்மையை ஒப்புக்கொண்ட முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்

Siva
புதன், 29 மே 2024 (09:29 IST)
கார்கில் போருக்கு நாங்கள் தான் காரணம் என்று முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளதாக அந்நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

கடந்த 1999 ஆம் ஆண்டு கார்கில் போர் நடைபெற்றது என்பதும் பாகிஸ்தான் துருப்புகள் திடீரென இந்திய பகுதிகளில் ஊடுருவியதை அடுத்து இந்த போர் நடந்தது என்பதும் இதில் இரு தரப்பிலும் உயிர் சேதம் ஏற்பட்டிருந்தாலும் இந்தியா வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த போருக்கு இந்தியா தான் காரணம் என்று பாகிஸ்தான் தெரிவித்து வந்த நிலையில் தற்போது முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், கார்கில் போருக்கு நாங்கள் தான் காரணம் என்று ஒப்புக்கொண்டு உள்ளார்

லாகூர் அமைதி ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறிவிட்டது தான் கார்கில் போருக்கு காரணம் என்றும் இந்திய பிரதமர் வாஜ்பாய் போட்ட அமைதி ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறிவிட்டது என்றும் இதனால் தான் இந்தியா - பாகிஸ்தான் இடையே கார்கில் போர் நடைபெற்றது என்றும் நவாஸ் ஷெரீஃப் கூறியுள்ளார்

இது எங்களுடைய தவறுதான் என்றும் ஒப்பந்தத்தை மீறி எங்கள் நாட்டின் துருப்புகள் காஷ்மீரில் ஊடுருவுளை மேற்கொண்டது என்றும் நவாஸ் ஷெரீஃப்,  கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்