வெள்ளை மாளிகையை மிஞ்சும் ஒபாமாவின் புதிய மாளிகை!!

Webdunia
வெள்ளி, 18 நவம்பர் 2016 (11:50 IST)
ஒபாமா வாங்கியுள்ள புதிய இல்லம், அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையை விட சிறப்பாக இருப்பதாக சமூகவலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது.


 
 
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்று அதிபராக பதவியேற்பவர் பதவிக்காலம் முடியும் வரை வெள்ளை மாளிகையில் தங்க வைக்கப்படுவர். தற்போது, அமெரிக்க அதிபராக பதவி வகித்து வரும் ஒபாமா, இந்த ஆண்டு இறுதியில் ஓய்வு பெறப் போகிறார். 
 
இதனால் தற்போதைய அதிபர் ஒபாமாவுக்கு அந்நாட்டு அரசு வாஷிங்டன் அருகே உள்ள கலோரமா பகுதியில் வெள்ளை மாளிகையில் இருந்து 3 கிலோதொலைவில் ஒபாமாவுக்கு புதிய வீட்டை ஒதுக்கியுள்ளது.
 
இந்த இல்லம் 1928ஆம் ஆண்டு கட்டப்பட்டது. வெள்ளை மாளிகையை விட அளவில் சிறியதாக இருக்கும் இதில், 9 படுக்கை அறைகள் உள்ளன. இதன் தற்போதைய மதிப்பு ரூ.41 கோடி. இதன் மாத வாடகை மட்டும் ரூ.15 லட்சம். 


 

 
8200 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த பிரமாண்ட வீட்டில் 9 படுக்கையறைகள், 8 குளியலறைகள், மொட்டைமாடி, 10 வாகனங்களை நிறுத்தும் அளவுக்கு பார்க்கிங் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.
 
ஒரு உயர்ரக சமயலறையும் விருந்தினர்களுக்கான ஒர் அறையும் நவீன வசதிகளுடன் இடம் பெற்றுள்ளது. ஒபாமா வெள்ளை மாளிகையை விட்டு சென்றாலும் அவருக்கு வழங்கப்படும் ரகசிய பாதுகாப்பு தொடரும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்