கள்ளக்குறிச்சி காவல்நிலையத்தில் குஷ்பு ஆய்வு.. விளக்கமளித்த காவல்துறை..!

Siva

புதன், 26 ஜூன் 2024 (11:58 IST)
கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த கள்ளச்சாராயம் மரணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் என்பதும் 20க்கும் மேற்பட்டோர் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. 
 
இந்த நிலையில் இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதிமுக வலியுறுத்தி வரும் நிலையில் தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து இந்த வழக்கை விசாரிக்க திட்டமிட்டுள்ளது. 
 
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த ஒன்பது பெண்கள் பலியாகி உள்ள நிலையில் இது குறித்து குஷ்பு உட்பட 3 நபர்கள் குழு அமைக்கப்பட்டது என்றும் இந்த குழு கள்ளக்குறிச்சிக்கு நேரடியாக சென்று விசாரணை செய்யும் என்றும் தேசிய மகளிர் ஆணையர் குழு தெரிவித்திருந்தது. 
 
இதனை அடுத்து குஷ்பு கள்ளக்குறிச்சியில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று விசாரணை நடவடிக்கைகள் குறித்து கேட்டார். அவருக்கு காவல் நிலைய அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்