வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் பணத்தை மாற்ற இந்தியாவிற்குதான் வரவேண்டும்: அதிகாரிகள் தகவல்

Webdunia
வெள்ளி, 18 நவம்பர் 2016 (11:43 IST)
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பிரதமரின் அறிவிப்பை அடுத்து, பொதுமக்கள் தங்களிடமுள்ள பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிகளில் காத்திருக்கின்றனர். ஆனால் வெளி நாட்டு வாழ் இந்தியர்களின் நிலை குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளிவராமல் இருந்தது.


 

இந்நிலையில் இது குறித்து வங்கி அதிகாரிகள் கூறுகையில்,

வெளி நாடுகளில் செயல்படும் இந்திய வங்கி கிளைகளுக்கு செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுக்கும் அதிகாரம் இல்லை. எனவே வெளி நாட்டு வாழ் இந்தியர்கள் தங்களது செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற இந்தியாவிற்கு வரவேண்டும். வேறு வழியே இல்லை என்று தெரிவித்தனர்.
 
அடுத்த கட்டுரையில்