''அடுத்த மாதம் அணு ஆயுதம்''...ரஷிய அதிபர் புதின் அறிவிப்பு...உலக நாடுகள் அதிர்ச்சி

Webdunia
சனி, 10 ஜூன் 2023 (13:59 IST)
பெலாரஸ் நாட்டிற்கு அணு ஆயுதம் வழங்கப்படும் என்று ரஷிய அதிபர் கூறியுள்ளது உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இது ஓராண்டைக் கடந்து போர் நடைபெற்று வருகிறது. இதனால், இரு நாடுகள் தரப்பிலும் ஆயிரக்கணக்கான போர் வீரர்கள், மக்கள் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் மற்றும் நேச நாடுகள் கூட்டமைப்புகள் உக்ரைனுக்கு பொருளாதார ரீதியாக உதவி செய்து, ஆயுத தளவாடங்களும் வழங்கி வருகின்றன.

இந்த  நிலையில், பெலாரஸ்  நாட்டிற்கு அணு ஆயுதங்கள் அடுத்த மாதத்திற்குள் வழங்கப்படும் என்று ரஷியா அதிபர் புதின் கூறியுள்ளார். இது உலக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், உக்ரைனின் நாட்டின் அண்டை நாடான பெலாரஸ் அதிபருடன், புதின் ஆலோசனை மேற்கொண்டார். அதன்படி, ''ஜூலை மாதம் தொடக்கத்தில் அணு ஆயுதங்களை வைப்பதற்கான கட்டமைப்புகள் நிறைவுபெறும்'' என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் உக்ரைன் உள்ளிட்ட நாடுகள் அதிர்ச்சியடைந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்