உக்ரைன் நாட்டின் மீது ரஷிய ராணுவ போர் தொடுத்து 1 ஆண்டு நிறைவடைந்துள்ளது. ரஷியாவுக்கு எதிராக உக்ரைனுக்கு ஆதரவாக மேற்கு உலக நாடுகள் நேட்டோ கூட்டமைப்பும், உக்ரைன் நாட்டிற்கு நிதியுதவியும், ஆயுதத் தளவாடங்களும் அளித்து உதவி வருகின்றன.
எனவே உக்ரைன் நாடு, வல்லரசான ரஷியாவுக்கு எதிராகப் போரிட்டு, பதிலடி கொடுத்து வருகிறது.
இதனால் மூன்றாம் உலகப் போர் மூளுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில், மேற்கத்திய நாடுகள், நேட்டோ கூட்டமைப்பில், தங்கள் பலத்தை மேலும் மேலும் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில், இக்கூட்டமைப்பில் ரஷியாவின் எல்லையைப் பகிரும் பின்லாந்து நாடு இணைந்து கொண்டது, விரைவில் ஸ்வீடனும் இணையவுள்ளது.
இந்த நிலையில், எதிரி நாடுகள், உளவு அமைப்புகள் ஆகியவற்றின் காரணமாக தன் உயிருக்கு பாதுபாப்பில்லை என்பதால், ரஷிய அதிபர் ரகசியமாக வாழ்ந்து வருவதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், உயிருக்கு பயந்து தன் பாதுகாப்பை அதிகப்படுத்தியுள்ள புதின், தான் செல்லும் பயணம் யாருக்கும் தெரியாத வகையில், ரகசிய ரயில் பயணம் செய்வதாக உயர்பாதுகாப்பு அதிகாரி க்ளெவ் கூறியுள்ளார்.
மேலும் இந்த ரகசிய ரயில் பயணம் மூலம் 180க்கும் மேற்பட்ட பயணங்களை அவர் மேற்கொண்டுள்ளதாகவும், சிக்னல் கண்டுபிடித்துவிடும் செல்போன்களையும் அவர் பயன்படுத்துவதில்லை என்று, கஜகஸ்தானில் உள்ள ரஷிய தூதரகத்தில் அவர் பதுங்கு குழியில் வசிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.