பாகிஸ்தானில் அடுத்தாண்டு பொதுத்தேர்தல் !-

Webdunia
வியாழன், 21 செப்டம்பர் 2023 (20:34 IST)
பாகிஸ்தான் நாட்டில் பிரதமர் அன்வர் உல் ஹக்  தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. ஏற்கனவே அங்கு பொருளாதார நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில், உள்நாட்டு பிரச்சனைகளும் உள்ளன.

அடுத்தாண்டு ஜனவரி மாதம் கடைசி வாரத்தில் பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அங்கு தேர்தல் நடைபெற்ற நிலையில், இம்ரான் கானின்  தெஹ்ரிக் ஏ இன்சாப் கட்சி வெற்றி வெற்றி பெற்று இம்ரான் கான் பிரதமரானார். அவர் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஷரீப் பிரதமராக பதவியேற்ற நிலையில், அவர் பதவிக்கால ஆகஸ்டில் முடிந்தது, எனவே இடைக்கால புதிய பிரதமராக அன்வர் உல் ஹக் பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்