ஆப்பிள் செல்போனை அரசு ஊழியர்கள் பயன்படுத்த தடை...

சனி, 9 செப்டம்பர் 2023 (19:32 IST)
சீனாவில் அதிபர் ஜி ஜிங்பிங் தலைமமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இங்கு மக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் எனப் பலரும் உலகின் முன்னணி செல்போன் நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தின் செல்போன்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில்,  விரைவில் ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த அப்டேசனான புதிய செல்போன் வெளியாகவுள்ளது.

இதனால், உலகம் முழுவதும் உள்ள ஆப்பிள் நிறுவன வாடிக்கையாளர்கள் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில்,  வெளி நாட்டு நிறுவனங்களின் பயன்பாட்டை குறைத்து, இணைய பாதுகாப்பை அதிகரிக்க சீனா முடிவெடுத்துள்ளது. இதற்காக, சீன அரசு ஊழியர்கள்  பணியின்போது வெளி நாட்டு முத்திரை கொண்ட செல்போன்களை பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.

சீனாவில் டிக்டால் செயலிக்கு விதிக்கப்பட்ட தடாய் எதிரொலியாக இந்த தடை வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்