அமீர்கானின் அடுத்த படத்தின் இயக்குனர் இவர்தான்.. வெளியான தகவல்!

செவ்வாய், 5 செப்டம்பர் 2023 (07:29 IST)
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கானின் கடைசி படமாக லால் சிங் சத்தா கடந்த ஆண்டு ரிலீஸ் ஆனது. ஆனால் இந்த திரைப்படம்  படுதோல்வி அடைந்தது. அதையடுத்து அவர் சினிமாவில் இருந்து அவர் ஒரு இடைவெளி எடுத்துக் கொள்ளப் போவதாக அறிவித்தார்.

அதனால் இந்த ஆண்டு அவர் படம் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில் இப்போது தன்னுடைய அடுத்த படத்துக்கான பணிகளை அமீர்கான் தொடங்கியுள்ளார். அவர் நடிக்க உள்ள அடுத்த படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகள் தொடங்கியுள்ளன.

இந்த படத்தை பாலிவுட்டின் முன்னணி இயக்குனரான ராஜ்குமார் சந்தோஷி இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தின் ஷூட்டிங் ஜனவரி 2024 ல் தொடங்க உள்ளதாகவும், 2024 கிறிஸ்துமஸில் ரிலீஸ் ஆகவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.இருவரும் இணைந்து அண்டாஸ் ஆப்னா ஆப்னா என்ற ஹிட் படத்தைக் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்