கொரோனா வைரஸால் இறந்தவர்களின் உடல்களை சமாதியில் வைக்க இடமும் நேரமும் இல்லை என்பதால் பெரிய பள்ளம் தோண்டி பிணங்களை கொத்து கொத்தாக புதைத்து வரும் நிலையில் அமெரிக்கா உள்ளது
கொரோனா வைரஸால் அமெரிக்காவில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி வருகின்றனர். நாளுக்கு நாள் கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கொண்டே செல்வதால், இறந்த உடல்களை புதைக்க இடம் மற்றும் நேர பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை மொத்தமாகப் புதைப்பதற்கு ஹார்ட் தீவில் குழிகள் தோண்டப்படுகின்றன. அந்தக் குழிகள் ஆதரவற்றவர்கள் மற்றும் அடக்கம் செய்ய வசதியில்லாதவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.
கொரோனாவால் இறந்த உடல்களைப் புதைக்கும் பணியில் பெரும்பாலும் சிறைக்கைதிகளே ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது