கோவையில் அதிகபட்சமாக 26 பேருக்கு கொரோனா பாதிப்பு !

Webdunia
வெள்ளி, 10 ஏப்ரல் 2020 (19:41 IST)
இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை நீட்டிக்குமாறு மாநில முதல்வர்கள் பிரதமரை கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் ஏற்கனவே, கொரோனாவால் பாதிக்கப்பட்ட 834 பேரில் 700க்கும் மேற்பட்டவர்கள் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று தகவல் வெளியான
நிலையில் தமிழகத்தில் இன்று புதிதாக 77 பேருக்கு கொரொனா தொற்று இருப்பதாக தமிழக அரசின் தலைமைச் செயலர் தற்போது செயலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 911 ஆக அதிகரித்துள்ளது.
உயர்ந்ததுள்ளது  குறிப்பிடத்தக்கது.

மேலும், தமிழகத்தில் இன்று கோவையில் அதிகபட்சமாக 26 பேருக்கும், செங்கல்பட்டில் 12 பேருக்கும் ராணிப்பேட்டை மற்றும் சென்னையில் தலா 9 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்