ஒமிக்ரானை அடுத்து லாஸ்சா வைரஸ்: 40 பேர் பலி என தகவல்!

Webdunia
ஞாயிறு, 6 பிப்ரவரி 2022 (08:06 IST)
கொரோனா வைரஸ் ஒமிகிரான் வைரஸ் என மாறி மாறி உலகம் முழுவதும் வைரஸ்கள் பரவி மனித இனத்தையே அச்சுறுத்தி வரும் நிலையில் தற்போது புதிதாக லாஸ்சா என்ற வைரஸ் பரவி வருவதாகவும் இந்த வைரஸ் காரணமாக 40 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
நைஜீரியா நாட்டில் மிக வேகமாக பரவி வரும் லாஸ்சா வைரஸ் காய்ச்சலால் 40 பேர்கள் உயிரிழந்ததாக அந்நாட்டு சுகாதார துறை தெரிவித்துள்ளது 
 
லாஸ்சா  வைரஸ் எலிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுதாகவும் குறிப்பாக 21 முதல் 35 வயது வரை உள்ளவர்களை அதிகம் தாக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
கொரோனா வைரஸ் வைரசை அழித்து புதிதாக லாஸ்சா என்ற வைரஸ் மிக வேகமாக நைஜீரியா நாட்டில் பரவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்