10 ஆயிரத்தை விட குறைந்தது இன்றைய கொரோனா பாதிப்பு!

வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (19:23 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 20 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வந்த போதிலும் இன்று 10 ஆயிரத்தை விட குறைவான கொரோனா பாதிப்பு குறைந்தது 
 
இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,916 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 21,435 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,475 என்றும் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 என்றும் தமிழக அரசின் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது
 
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 33,97,238 என்றும், இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,27,356 என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்