இன்று காலை 10 மணி வரை, தமிழகத்தில் உள்ள 24 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் செல்வோர் குடையுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.