தாஜ்மஹாலை பார்க்க வருபவர்களுக்கு புதிய நிபந்தனை; சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சி

Webdunia
புதன், 3 ஜனவரி 2018 (13:21 IST)
உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் தாஜ்மஹால், ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் அமைந்திருக்கிறது. இது காதலின் சின்னமாக கருதப்படுகிறது.

முகலாய மன்னரான ஷாஜகானால், இறந்து போன அவரது  மனைவி மும்தாஜ்  நினைவாக 22,000 பணியாட்களைக் கொண்டு 1631 முதல் 1654 ஆம் ஆண்டுக்கு இடையில், பளிங்குக்கற்களால் கட்டிமுடிக்கப்பட்டது தான் தாஜ்மஹால்.

தாஜ்மஹாலை பார்ப்பதற்கு இந்தியாவின் பிறமாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். தினமும் சராசரியாக 60 ஆயிரத்தில் இருந்து 70 ஆயிரம் பேர் வரை தாஜ்மகாலை பார்த்து செல்கின்றனர். தினமும் சுற்றுலா பயணிகள் அதிகளவில வருவதால் சுற்றுச்சூழல் மாசு உருவாகி தாஜ்மகாலுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது மேலும் காற்று மாசின் காரணமாக தாஜ்மஹாலின் நிறம் மாறிவிட்டதாக புகார்கள் வந்த வண்ணம் இருக்கிறது.

இவற்றை தவிர்க்க தாஜ்மஹாலை பார்க்க வருபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தாஜ்மஹாலை இனி தினமும் 40 ஆயிரம் பேருக்கு மட்டுமே பார்ப்பதற்கு அனுமதிக்க திட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் வருகிற 20-ந்தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்