அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவுக்கு எதிராக வரி விதிப்பதாக மிரட்டியதால், கடந்த இரு நாட்களாக சரிந்த பங்குச்சந்தை, தற்போது மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது. இந்தியாவின் உறுதியான நிலைப்பாடு முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, இன்று பங்குச்சந்தைகள் உயர்ந்திருப்பது முதலீட்டாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்): 167 புள்ளிகள் உயர்ந்து, 80,750 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை (நிஃப்டி): 69 புள்ளிகள் உயர்ந்து, 24,634 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இன்றைய வர்த்தகத்தில், ஆசியன் பெயிண்ட், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், பாரதி ஏர்டெல், சிப்லா, ஹீரோ மோட்டார், ஹிந்துஸ்தான் யூனிலீவர், இண்டஸ்இண்ட் வங்கி, ஐடிசி, ஜியோ ஃபைனான்ஸ், டாடா ஸ்டீல், டிசிஎஸ் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களின் பங்குகளின் விலை உயர்ந்துள்ளது.
அதே சமயம், அப்போலோ ஹாஸ்பிடல், ஹெச்.சி.எல். டெக்னாலஜி, ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, இன்ஃபோசிஸ், கோடக் மஹிந்திரா வங்கி, மாருதி, ஸ்டேட் வங்கி, சன் பார்மா போன்ற நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்துள்ளன.
அமெரிக்காவின் மிரட்டலுக்கு பணியாமல், ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்குவோம் என்று இந்தியா உறுதியாக அறிவித்ததே இந்த ஏற்றத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இது இந்திய பொருளாதாரத்தின் பலத்தையும், அதன் சுயசார்பு நிலைப்பாட்டையும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.