ஆப்பிக்காவில் பரவும் புதிய நோய்த்தொற்று- தேசிய உயிரி ஆய்வு மையம்

Webdunia
செவ்வாய், 3 மே 2022 (19:19 IST)
காங்கோ எல்லையை ஒட்டிய பகுதிகளில் எபோலா வைரஸ் தாக்குதல் பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் மீண்டும் எபோலா வைரஸ் பரவி வருகிறது. இதுவரை அந்த நாட்டில்13 முறை இத்தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் இதுவரை சுமார் 2300 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் தற்போது எபோலா வைரஸ் மீண்டும் பரவி வருகிறது என தேசிய உயிரி ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

எனவே இந்த  நோய்த் தொற்று குறித்த கண்காணிப்பு பணியில் நிபுணர் குழு ஈடுபட்டுள்ளது.

எலோபா வைரஸ் அண்டை நாடுகளுக்குப் பரவுமோ என்ற அச்சம் எழுந்ததால் மக்களுக்கு முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்