''என்னை கைது செய்வதற்கு முன்னான என் கடைசி டுவீட்'' -இம்ரான் கான்

Webdunia
புதன், 17 மே 2023 (23:18 IST)
’'என்னை அடுத்து கைது செய்வதற்கு முன்னான என் கடைசி டுவீட் இது என்று முன்னாள் பிரதமர் இம்ரான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் நாட்டில், ஊழல் வழக்குத் தொடர்பாக முன்னாள் பிரதமர் இம்ரான் கானை நீதிமன்ற வளாகத்தில் வைத்து ரேஞ்சர் படையினர் கைது செய்தனர்.

‘இம்ரான் கைது சட்டவிரோதம் என்று கூறி இன்னும் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து,  ‘இம்ரான்கான் இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். அவரை போலீஸ் லைன் விருந்தினர் மாளிகையில் வைக்கப்படுவார். அவர் கைதியாக கருதப்படமாட்டார். அவரது பாதுகாப்பை போலீஸார் உறுதிசெய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இவ்வழக்கு 12 ஆம் தேதி இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், இம்ரான் கானுக்கு  2 வாரம் ஜாமீன் வழங்கியுள்ளது உயர்நீதிமன்றம்.

இந்த விவகாரம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், முன்னாள் பிரதமர் இம்ரான் கான்(70 வயது)  போலீஸார் என்னை கைது செய்வதற்கு முன்னான என் கடைசி டுவீட் இது என்று பதிவிட்டுள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
இன்று இம்ரான் கான் தன் லைவ் வீடியோவில் பேசும்போது,  ’’என்னை அடுத்து கைது செய்வதற்கு முன்னான என் கடைசி டுவீட் இது..என் வீட்டை  போலீஸார் வந்து சுற்றிவளைத்துள்ளனர். பாகிஸ்தான் அழிவுப் பாதையை  நோக்கி போவதைப் பார்த்து நான் பயத்தில் இருக்கிறேன்.  நாம் சிந்திக்காமல் விட்டால் அனைத்து விஷயங்களையும் தெரியமுடியாமல் போய்விடும்’’  என்று கூறினார்.

ஜாமன் பூங்காவில் உள்ள பிடிஐ கட்சியின் தலைவர் இம்ரான் வீட்டைச் சுற்றிலும் பஞ்சாப் போலீஸார் சுற்றிவளைத்துள்ளதை அந்த நாட்டின் டான் பத்திரிக்கையின் வலைதள செய்திசேகரிப்பாளர் உறுதி செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்