நான் வெல்ல முடியாதவன், மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன்: ராகுல் காந்தி ட்விட்..!

சனி, 13 மே 2023 (10:47 IST)
கர்நாடக மாநில தேர்தல் முடிவுகள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் நிலையில் உள்ளது. சற்று முன் வெளியான தகவலின் படி காங்கிரஸ் கட்சி 113 இடங்களிலும் பாஜக 76 இடங்களிலும் மதசார்பற்ற ஜனதா தளம் 30 இடங்களிலும் மற்றவை ஐந்து இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. 
 
காங்கிரஸ் கட்சி இதேரீதியில் சென்றால் அறுதி பெரும்பான்மை பெற்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பி ஆன ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் நான் வெல்ல முடியாதவன், நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன் என்று பதிவு செய்துள்ளார். 
 
கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகுத்து வரும் நிலையில் அவரது இந்த ட்விட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர் ஆனால் அதே நேரத்தில் பாஜக தலைமை அலுவலகம் வெறிச்சோடி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்