ஒரே நேரத்தில் பல பள்ளிகளில் வேலை…ரூ.1 கோடிசம்பளம் வாங்கிய ஆசிரியை !

Webdunia
திங்கள், 8 ஜூன் 2020 (23:20 IST)
உத்தரப்பிரதேச மாநிலத்தில்  அரசுப் பள்ளி ஆசிரியையாக இருக்கும்  ஆனாமிகா ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில் பணியாற்றியதாக கணக்குக் காண்பிக்கப்பட்டு அவருக்கு மாதம் ரூ.1 கோடி சம்பளம் வழங்கிவந்ததாகத் தெரிகிறது.

இவர் மெயின் புரியில் உள்ள பள்ளிடில் பணியாற்றி வருகிறார். இருப்பினும் அலிகார், பிரக்யாராஜ் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் கஸ்தூர்பா காந்தி பலிகா வித்யாலயா பள்ளியில் பணியாற்றியதாக அவர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த விசாரணைக்கு உத்தரப்பிரதேச மாநில துவக்கக் கல்வி துறையின் இயக்குநர் உத்தரவிட்டிருந்தார்.

அதேநேரம் அனாமிகா பெயரில் பணியாற்றி வந்த பிரியா சிங் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

அவர்கள் மீது ஆள்மாறாட்டம் மூலம் மோசடி, ஆவணத்தை தவறாகப் பயன்படுத்துதல் போன்ற பிரிவுகளில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்