பிரியங்கா காந்தியின் 1000 பஸ் திட்டம்: உபி முதல்வர் ஒப்புதல்

திங்கள், 18 மே 2020 (19:28 IST)
கடந்த சில மாதங்களாகவே உத்தரபிரதேச அரசியலில் தீவிர கவனம் செலுத்தி வரும் பிரியங்கா காந்தி, உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து வெளி மாநிலத்திற்கு வேலை நிமித்தம் சென்ற புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த மாநிலத்திற்கு அழைத்து வர தீவிர நடவடிக்கை எடுத்தார் 
 
அதன் அடிப்படையில் அவர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆயிரம் பேருந்துகளை ஏற்பாடு செய்து அதற்கான அனுமதியை உத்தரப்பிரதேச அரசிடமிருந்து பெற காத்திருந்தார். இந்த நிலையில் தற்போது உத்தரப்பிரதேச அரசு பிரியங்கா காந்தியின் ஆயிரம் பஸ் திட்டத்திற்கு அனுமதி கொடுத்துள்ளது
 
இதனால் கடந்த இரண்டு நாட்களாக தயாராக இருந்த ஆயிரம் பேருந்துகள் தற்போது பல்வேறு மாநிலங்களுக்கு உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து செல்ல உள்ளது. அந்தப் பேருந்துகள் வெளி மாநிலங்களில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் அழைத்து வர உள்ளது. இந்த 1000 பேருந்துகளில் இருந்து சுமார் 30000 முதல் 40000 பேர் வரை உத்தரப்பிரதேச மாநிலத்தில் அழைத்து வர வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது 
 
பிரியங்கா காந்தியின் இந்த திட்டத்தில் அரசியல் எதிர்பார்க்காமல் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் ஒப்புதல் கொடுத்துள்ளதற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்