கொரோனா பரவ மத மாநாடு காரணம் என பிரச்சாரம் செய்த இளைஞர் சுட்டுக்கொலை: பரபரப்பு தகவல்

ஞாயிறு, 5 ஏப்ரல் 2020 (17:11 IST)
கொரோனா பரவுவதற்கு டெல்லியில் நடைபெற்ற மத மாநாடு காரணம் என உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த இளைஞர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
டெல்ல்லியில் நடைபெற்ற மத மாநாட்டில் கலந்து கொண்டவர்களால் தான் இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் அதிகம் பரவி இருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டு வருகிறது. இந்த நிலையில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தம்முடைய பகுதியில் மத மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் தான் இந்தியாவில் அதிகமாக கொரோனா வைரஸ் தொற்று பரவியது என பிரச்சாரம் செய்ததாக தெரிகிறது 
 
அந்த இளைஞர் தனது வீட்டின் வெளியே நின்று பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது திடீரென மர்ம நபர்கள் அந்த இளைஞரை துப்பாக்கியால் சுட்டனர். இதில் அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் சுட்டுக் கொன்ற மர்ம நபர்கள் இரண்டு பேர்களை கைது செய்துள்ளனர். இதனை அடுத்து சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞரின் குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படுவதாக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்