22 ஆண்டுகளாக மணல் கோட்டையில் வாழும் மன்னர்

Webdunia
ஞாயிறு, 21 ஜனவரி 2018 (15:31 IST)
பிரேசில் நாட்டில் மன்னர் ஒருவர் கடற்கரை பகுதியில் மணல் கோட்டை அமைத்து அதில் 22 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார்.

 
பிரேசில் தலைநகர் ரியோடி ஜெனீரோவில் பாரா டா திஜூகா பகுதியை சேர்ந்த மார்சியோ மி‌ஷயல் மடோலியாஸ்(44) என்பவர் மணல் கோட்டையில் வசித்து வருகிறார். மணல் சிற்பங்கள் செய்வதில் வல்லவரான இவர் சிறு வயதில் இருந்தே கடற்கரையில் வாழ்ந்து வந்தார்.
 
கடற்கரையோரம் வசிக்க அதிக அளவு வாடகை கொடுக்க வேண்டிய நிலை உள்ளதால் அவர் தனக்கென்று ஒரு அரண்மனையை கட்ட முடிவு செய்து அதன்படி அழகான மணல் அரண்மனையை கட்டியுள்ளார். இதில் கடந்த 22 வருடமாக வாழ்ந்து வருகிறார். 
 
இந்த மணல் கோட்டையை காண பலர் அந்த பகுதிக்கு வந்து செல்கின்றனர். அவரை அனைவரும் மன்னரே அழைக்கின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்