உலகில் உள்ள பெரும்பாலான உயிரினங்கள் பிறந்தவுடன் எழுந்து நடக்கும். ஆனால் மனிதர்கள் மட்டும் பிறந்து பல மாதங்களுக்கு பின்னர்தான் எழுந்து நடப்பதுண்டு. கழுத்து நின்ற பின், குழந்தைகள் தவழ ஆரம்பிக்கும். சுமார் 8&9 மாதங்கள் முதல் 12 மாதங்களில் மட்டுமே குழந்தை நடக்க ஆரம்பிக்கும்.
இந்நிலையில் ஒரு குழந்தை தாயின் கருவறையில் இருந்து வெளியே வந்த உடனே நடக்க ஆரம்பித்துள்ளது. செவிலியர் அந்த குழந்தையின் கையை பிடித்து, தூக்கி பெட்டில் நிற்க வைத்துள்ளார். அப்போது அந்த குழந்தை தானாக நடக்க ஆரம்பித்தது. இதனை கண்டு மருத்துவ உலகினர் வியப்பில் உள்ளனர்.