பாஸ்வேர்டு கொடுக்க மறுத்த ஃபேஸ்புக் பயனாளிக்கு சிறை: திடுக்கிடும் தகவல்

Webdunia
சனி, 1 செப்டம்பர் 2018 (20:56 IST)
பிரிட்டனில் ஒரு சிறுமியின் கொலை வழக்கை விசாரணை செய்த போலீசார் சந்தேகம் அடைந்த ஒருவரின் ஃபேஸ்புக் பாஸ்வேர்டை கேட்டனர். ஆனால் அவர் தனது ஃபேஸ்புக் பாஸ்வேர்டை கொடுக்க மறுத்ததால் அவருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது.

பிரிட்டனை சேர்ந்த லூசி என்ற 13 வயது சிறுமி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த சிறுமி அடிக்கடி நிக்கல்சன் என்பவரின் வீட்டுக்கு சென்றுள்ளார். மேலும் இருவரும் ஃபேஸ்புக்கிலும் அடிக்கடி சாட் செய்துள்ளனர்.

எனவே நிக்கல்சன் மீது சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவருடைய ஃபேஸ்புக் பாஸ்வேர்டை கேட்டனர். ஆனால் ஃபேஸ்புக் பாஸ்வேர்டு என்பது தனது தனிப்பட்ட விஷயம் என்றும், அதன் பாஸ்வேர்டை தரமுடியாது என்றும் நிக்கல்சன் மறுத்துள்ளார். இதுகுறித்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது பாஸ்வேர்டை கொடுக்க மறுத்த நிக்கல்சனுக்கு 14 மாதங்கள் சிறைதண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. பிரிட்டன் உள்பட பலநாடுகளில் போலீசாரின் விசாரணையின்போது சமூக வலைத்தளங்களின் பாஸ்வேர்டை கொடுக்க வேண்டும் என்பது சட்டத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்