இந்த நிலையில் தனது டாக்டர் நண்பர் ஒருவரின் மூலம் கருணாநிதியின் மருத்துவ அறிக்கைகளை லண்டன் டாக்டர் ஒருவரிடம் மு.க.அழகிரி ஆலோசனை செய்து வருவதாகவும், விரைவில் லண்டன் டாக்டர் சென்னை வரவுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார். மேலும் கனிமொழி தவிர ஸ்டாலின் உள்பட அனைவரிடமும் மு.க.அழகிரி சற்று ஒதுங்கியே இருப்பதாகவும், இருப்பினும் கருணாநிதி குணமடைய வேண்டும் என்பதில் அவர் மற்றவர்களை விட தீவிர அக்கறை செலுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.