லண்டன் விந்தணு வங்கியில் அறிவியல் இயக்குனராக பணியாற்றி வரும் இந்திய வம்சாவளி மருத்துவர் கமால் அஹுஜா என்பவர் தாய்மை அடைய பெண்களுக்காக இந்த மொபைல் செயலியை உருவாக்கியுள்ளார்.
இந்த செயலி மூலம், பெண்கள் ஆன்லைனில் விந்தணு தானம் பெறலாம். மேலும், இந்த செயலியில் விந்தணு தானம் செய்த நபரின் ஒட்டுமொத்த தகவல்களும் சேகரித்து தொகுக்கப்பட்டிருக்கும்.
குறிப்பாக விந்தணு தானம் அளித்த நபரின் கல்வித் தகுதி, வேலை, தனிப்பட்ட குணங்கள், உயரம், நிறம், தலைமுடி, கண் இமை உள்ளிட்ட அத்தனை விவரங்களும் இதில் பதிவு செய்யப்பட்டிருக்கும்.
இதன் மூலம் நேரடியாக விந்தணு தானம் பெற தயங்கும் பெண்கள் வீட்டில் இருந்தபடியே தாங்கள் விரும்பும் குணம் கொண்ட ஆண்களின் விந்தணுவை தேர்வு செய்து குழந்தையைப் பெற்றுக் கொள்ள முடியும்.
செயலி மூலம் ஆர்டர் கொடுத்தவுடன், ஆர்டர் செய்த பெண் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் கருத்தரிப்பு மையத்துக்கு விந்தணு நேரடியாக அனுப்பி வைக்கப்படும்.
சரி அதெல்லாம் போகட்டும், இதற்கு கட்டணம் எவ்வளவு தெரியுமா?? வெறும் 82,000 ரூபாய் தான்!!