ஆபாச படத்தை பார்த்து அதே போல் செய்ய வேண்டும்.. கணவன் வற்புறுத்தலால் புதுமணப்பெண் தற்கொலை..!

Mahendran

சனி, 15 பிப்ரவரி 2025 (17:56 IST)
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு சமீபத்தில் திருமணம் ஆன நிலையில், அவர் தனது மனைவியிடம் ஆபாச படங்களை காட்டி, அதே போல் நாமும் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, அந்த இளம் பெண் அதிர்ச்சி அடைந்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது, இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம், கோபாலபுரம் என்ற பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. இந்த நிலையில், திருமணமான சில நாட்களிலேயே, மனைவியிடம் ஆபாச புகைப்படங்களையும் வீடியோக்களையும் காட்டி, அதே போல் நாமும் இருக்க வேண்டும் என்று வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
 
இது குறித்து, அந்த மணப்பெண் தனது பெற்றவரிடம் கூறியபோது, மாப்பிள்ளையை அழைத்து கவுன்சிலிங் கொடுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதன் பின்னர், தனது கணவர் திருந்திவிடுவார் என நம்பிய மணப்பெண், மீண்டும் அவரிடம் வாழ சென்றபோதுதான், அவர் ஒரு காம பைத்தியம் என்பது தெரிய வந்தது.
 
தினமும் கணவர் செய்த சித்திரவதை காரணமாக, இனிமேலும் தன்னால் அவருடன் வாழ முடியாது என முடிவு செய்த அந்த இளம் பெண், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், காவல்துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்து, கணவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்