எப்படி இருந்த மனுசன் இப்படி ஆயிட்டார்! – வடகொரிய அதிபரை கண்டு அதிர்ந்த மக்கள்!

Webdunia
செவ்வாய், 29 ஜூன் 2021 (11:50 IST)
வடகொரிய அதிபர் நீண்ட காலம் கழித்து பொதுமக்களிடையே தோன்றிய நிலையில் அவரது உடல்நிலை கண்டு மக்கள் அதிர்ச்சியடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.

உலக நாடுகளில் அரசியல் விவகாரங்களில் தொடர்ந்து மர்மமாகவே செயல்பட்டு வரும் நாடாகவே வடகொரியா இருந்து வருகிறது. சமீபத்தில்தான் தங்கள் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டுள்ளதையே வடகொரியா வெளிப்படையாக ஒப்புக்கொண்டது. அதுபோல வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்னின் உடல்நலம் குறித்தும் தொடர்ந்து சர்ச்சைகளே நிலவி வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவர் இறந்துவிட்டடதாக உலக அளவில் பரபரப்பு எழுந்தபோது கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு தன் இருப்பை உறுதி செய்தார். பின்னர் மீண்டும் கிம் ஜாங் அன் தலைகாட்டாமல் இருந்து வந்த நிலையில் அவர் தீவிர உடல்நல குறைவில் இருப்பதாக பேசிக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஆளுங்கட்சி கூட்டத்தில் கிம் ஜாங் அன் கலந்து கொண்டுள்ளார். ஆனால் அவர் வழக்கத்தை விடவும் மிகவும் மெலிந்த தோற்றத்தில் இருந்ததாகவும், அதை கண்டு கொரிய மக்கள் வேதனை தெரிவித்ததாகவும் அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்