தென் கொரியாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நாளை துவங்குகிறது. இதன் துவக்க விழாவுக்கு முன்னதாக வடகொரியாவில் அதிபர் கிம் முன்பாக ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது.
வடகொரியா ராணுவத்தின் 70வது ஆண்டை கொண்டாடும் விதமாக இந்த ராணுவ அணிவகுப்பு நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராணுவ அணிவகுப்பில் பல்வேறு ஏவுகணைகள் அணிவகுக்கப்பட்டிருந்தன.
பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் வடகொரிய அதிபர் கிம் பேசினார். அவர் கூறியதாவது, உலக தரம் வாய்ந்த ராணுவத்தை கொண்ட நாடாக வடகொரியா மாறியுள்ளது. உலகம் தரம் வாய்ந்த ராணுவத்தை நாம் கொண்டுள்ளோம் என்று கூறினார்.