புதுச்சேரியில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 60 வயதான முதியவர் ஒருவர் 12 வயது சிறுமிக்கு ஹார்மோன் மாத்திரைகள் கொடுத்து 20 வயது பெண்ணை போல மாற்றி 5 வருடமாக பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நடந்துள்ளது.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தியாரி கக்னர் என்ற 60 வயது முதியவர் ஒருவர் கடந்த சில ஆண்டுகளாக சட்ட ரீதியாக எந்த ஆவணங்களும் இல்லாமல் ஒரு சிறுமியை தனது வீட்டில் வைத்து வளர்த்து வருகிறார். இரவிலும் தன்னுடன் படுக்க வைத்து அந்த சிறுமியை பாலியல் ரீதியில் துன்புறுத்துகிறார்.
12 வயதான அந்த சிறுமிக்கு தொடர்ந்து ஹார்மோன் மாத்திரைகள் கொடுத்து வந்துள்ளார். இதனால் அந்த சிறுமி 20 வயதான பெண்ணை போல மாறி இருக்கிறார். இந்த விவகாரம் குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவுக்கு தெரியவர அந்த முதியவர் நாட்டை விட்டு தப்பித்து செல்ல முயன்றுள்ளார். ஆனால் அதிரடியாக அவரை தடுத்து போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.